Skip to main content

“தமிழிசையே இப்படி சொல்கிறார் இன்னும் மோடி வாய் திறந்தால் எப்படி இருக்கும்'' - கே.எஸ். அழகிரி பேட்டி

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

Tamilisai says this and what if Modi opens his mouth'' - KS Azhagiri interview

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''போராட்டங்கள் என்பதை அரசியல் நடவடிக்கையாகக் கருத முடியாது. தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கையைக் கேட்கலாம். எந்த ஒரு கோரிக்கையையுமே அரசு 100% முடித்துவிட முடியாது. வாராக்கடன் விஷயத்தில் நாங்கள் சொல்வது என்னவென்றால் ஏன் ஏழைகளுக்குக் கொடுக்காமல் செல்வந்தர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்றுதான் கேட்கின்றோம். இந்த அரசைப் பொறுத்தவரை கூட்டணி என்பதற்காகச் சொல்லவில்லை எதிர்க்கட்சியாக இருந்தால்கூட இந்த ஒன்றரை வருடத்தில் இந்த அரசினுடைய தவறு சுட்டிக்காட்டப்பட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் அதைத் திருத்திக் கொள்கிறார். எனவே தொழிற்சங்கங்களுடைய கோரிக்கைகளை முதல்வர் பரிசீலிப்பார் அதில் மாற்றுக் கருத்து இல்லை.

 

கறவை மாடு வைத்திருப்பவர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று சொன்னார்கள். கறவை மாட்டை யார் வைத்துள்ளார்கள் தமிழ்நாட்டில், டிவிஎஸ் கம்பெனியோ அல்லது மிகப்பெரிய ஆட்களா வைத்திருக்கிறார்கள். இல்லை ஏழை மக்கள் விவசாயிகள் வைத்திருக்கிறார்கள். புண்ணாக்கு விலை ஏறி இருக்கிறது தவிடு விலை ஏறி இருக்கிறது. அப்பொழுது கொள்முதல் விலையை ஏற்ற வேண்டும் என பால் சங்கங்கள் கேட்கிறார்கள். அதற்கு கொடுக்கும்பொழுது ஆவின் பால் விலையும் ஏறத்தான் செய்யும். சில விஷயங்களை மார்க்கெட்தான் முடிவு செய்கிறது. லிப்ரலைசேஷன் என்ற பொருளாதார தத்துவத்தின் சிறப்பே ஒரு விலையேற்றம் அல்லது விலை குறைவு என்பது மார்க்கெட்தான் முடிவு செய்யும். வரி போட்டு பால் விலை ஏற்றியிருந்தால்தான் அரசின் மீது தவறு. கொள்முதலுக்காகக் கொடுத்திருந்தால் அது தவறில்லை. ஏனென்றால் அந்தப் பணம் விவசாயிகளுக்குப் போகிறது'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'புதுச்சேரியில் பாஜக துணையோடுதான் ஆட்சியில் அமர்ந்தோம். ஆனால் ஆட்சி நடத்த முடியவில்லை. மக்கள் சேவை செய்ய முடியவில்லை' என புதுச்சேரி முதல்வர் வேதனை தெரிவித்துள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த கே.எஸ்.அழகிரி, ''அதைவிட வேதனை என்ன தெரியுமா அவரை சுதந்திரமாகப் பேச நாங்கள் அனுமதித்திருக்கிறோம் என தமிழிசை சௌந்தரராஜன் சொல்கிறார். ஒரு முதலமைச்சர் ஒரு கருத்தை சொல்வதற்கே நாங்கள் அனுமதித்ததால் அவர் சொல்கிறார் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய சர்வாதிகாரம். தமிழிசை சௌந்தரராஜன் இப்படிச் சொன்னால் மோடி வாய் திறந்தால் எப்படி இருக்கும். அதுதான் பாண்டிச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.