தென்கிழக்கு ஆசியாவில் சில மாதங்களுக்கு முன் வி.எம்.வேர் (V.M.Ware) எனும் மென்பொருள் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் தென்கிழக்கு ஆசியாவிலே எளிதாக சிங்கப்பூர் நாட்டில் உள்ளவர்களின் வங்கி கணக்குகளைதான் எளிதாக ஹேக் செய்யமுடியும் என்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளட்து என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்விற்காக தென்கிழக்கு ஆசியாவில் மொத்தம் 5,000 நபர்களிடம் அந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதில், சிங்கப்பூரில் மட்டும் 1,000 நபர்களிடம் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிகமானோர் ஒரே கடவுசொல்லையே அவர்களின் ஆன்லைன் வங்கி கணக்கும் மற்ற இதர செயல்பாட்டுகளுக்கும் உபயோகம் செயகிறார்கள் என்று அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. மேலும் வெறும் 14% பேர் மட்டுமே வெவ்வேறு கடவுசொல்களை பயன்படுத்துகின்றனர் என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூரில் உள்ளவர்களில் கால்வாசிக்கும் மேல் அவர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் விவரங்களை ஏழு வெவ்வேறு வலைதளங்களிலும் ஆப்களிலும் கொடுத்திருக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. அதே சமயம் அதில் 82% பேர் டிஜிட்டல் முறையைவிட ரொக்கப் பரிவர்தனையே பாதுகாப்பானது என்று வாக்களித்துள்ளனர்.