Skip to main content

அண்ணன் என்னடா தம்பி என்னடா சொல்லும் ஜெயக்குமார் மீது பெண் விஷயத்தில் எடுத்த நடவடிக்கை என்ன- வெற்றிவேல்

Published on 19/12/2018 | Edited on 19/12/2018

 

vetrivel

 

சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான வெற்றிவேல் கூறுகையில்,

 

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை எந்த ஒரு அமைச்சர்களும் 11,12 நாட்கள் தங்கியிருந்து பார்க்கவில்லை, சந்திக்கவில்லை ஆனால் எங்கள் துணை பொதுச்செயலாளர் அங்குள்ள மக்களுக்கு என்ன அடிப்படை வசதிகள் தேவை என்பதை கேட்டு கேட்டு பூர்த்தி செய்தார்.  சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருந்தார். ஆனால் மற்ற அமைச்சர்கள் அப்படி இல்லை. ஒரு அமைச்சர் கூட  அப்படி இல்லை. உங்களுக்கெல்லாம் தெரியும் அரசு வழங்கிய நிவாரணத்தில் சரியாக பார்சல் செய்யப்படாத துணிகள் வைத்து முறைகேடுகள் நடந்திருப்பது ஊருக்கே தெரிந்த விஷயம் ஊடகங்கள் கூட இதனை சொல்லியிருக்கிறது. வீடியோவும் வெளியாகியிருக்கு. அதை கண்டித்து டிடிவி தினகரன் அறிக்கை கொடுத்தார். ஆனால் அந்த அறிக்கைக்கு ஜெயக்குமார் போன்ற மொராலிட்டி ஒருவரை அமைச்சரவையில் வைத்துக்கொண்டு அவரை வைத்துக்கொண்டு ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுப்பது எந்த வகையில் நியாயம்.  அண்ணன் என்னடா தம்பி என்னடா நடவடிக்கை எடுத்தேன் என்கிறார்கள். மந்திரி என்னடா எம்எல்ஏ என்னடா என ஜெயக்குமார் மீது எடுக்க வேண்டுமே நடவடிக்கை. ஏன் அந்த சிந்து என்ற பெண் விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. பத்தாம் மாதம் 28 ஆம் தேதி ஜெயக்குமாருக்கு நான் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தேன். சிந்து  சம்பந்தமாக ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். இன்றுவரை பதில் இல்லை, இப்பேர்ப்பட்ட நல்ல மனிதர் தான் ஜெயக்குமார்.

 

ஜெயக்குமார் இதை தொடர்ந்தார் என்றால் எந்தெந்த பெண்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்று வரிசையான லிஸ்டை வெளியிடுவேன். நாளையிலிருந்து  இருந்து தினமும் ஒன்று ஒன்றாக சொல்வேன். ஜெயக்குமாருக்கு அவர் பண்ணிய தப்பு எல்லாமே தெரியும். அந்த மந்திரி பதவியை வைத்துக் கொண்டு பல குடும்பங்களை சீரழித்து கொண்டிருக்கிறார். இப்பொழுது இல்லாததை  ஊடகங்களில் சொல்லி வருகிறார் எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்