தமிழ் பேரரசன் ராஜராஜசோழன் உலகத்தயே திரும்பிப் பார்க்க வைத்த கட்டிடக் கலை நுணுக்கங்களுடன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் தமிழ் இல்லாமல் யாருக்கு புரியாத சமஸ்கிருதத்தில் மட்டுமே மந்திரங்கள் ஓதப்படும் என்ற நிலையில்..
தமிழ் மன்னன் பேரரசன் ராஜராஜன் கட்டிய கோயிலில் ஓதுவார்கள் இல்லாமல் குடமுழுக்கு நடத்தக் கூடாது எங்கும் தமிழ் இருக்க வேண்டும். தமிழில் மட்டுமே குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று பெருவுடையார் கோயிர் மீட்புக்குழு பெ.மணியரசன் உள்ளிட்ட பலரும் நீதிமன்றம் சென்று வழக்க தொடுத்தனர். அங்கே வந்த இந்து சமய அறநிலையத்துறை இரு மொழிகளிலும் குடமுழுக்கு செய்யப்படும் என்று உறுதி அளித்தது. அதனால் பல போராட்டங்கள் கைவிடப்பட்டது.
பிப்ரவரி 5 ந் தேதி குடமுழுக்கு நடக்க உள்ள எங்கும் வண்ணமயமானது.. நகர வீதிகள் ஒழுங்கு செய்யப்பட்டது. குடமுழுக்கு செய்ய 31 ந் தேதி வெண்ணாற்றில் இருந்து யானை, குதிரைகளுடன் காவிரித் தண்ணீர் புனித நீர் கொண்டுவரப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டது. 1 ந் தேதி நீதிமன்றத்தின் வெற்றியாக நூற்றுக் கணக்காண ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் என்று படித்தார்கள். பறையாட்டம் நடந்தது. இந்த நிலையில் தான் சமஸ்கிருத மொழியில் யாக சாலையில் மந்திரங்கள் ஓதப்பட்டது.
கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பதுகாப்பு எற்பாடுகளுடன் போக்குவரத்து ஏற்பாடுகளும் சீர் செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக போக்குவரத்து வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிகளை காண வெளியூர் பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
முதல்வர், அமைச்சர்கள் வருவார்களா?
தஞ்சை கோயிலுக்கு வந்து சென்றால் பதவிகளுக்கு ஆபத்து என்று ஒரு மூட நம்பிக்கை உள்ளது. அதனால் மிகப் பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள், வந்து கலந்து கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழுக்கு கிடைத்த வெற்றி...
தஞ்சை பெருவுடையாருக்கு தாய் தமிழில் தான் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று முழங்கிய தமிழ் ஆர்வலர்கள் கூறும் போது.. தமிழ் கடவுளுக்கு தமிழ் மொழியில் சொன்னால் தான் புரியும். தெரியாத மொழியில் சொன்னால் எப்படி புரியும். அதற்காகத் தான் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று திரும்பி இருக்கிறோம். அடுத்து மாமன்னன் ராஜராஜன் சிலையை கோயிலுக்குள் கொண்டு போய் வைப்போம். அதற்கும் இயக்கம் நடத்துவோம் என்றனர்.
மேலும் தமிழில் ஓதுவதை பார்க்க ஆயிரக்கணக்காண மக்கள் வந்து செல்கிறார்கள். அவற்றை நின்றே கேட்கிறார்கள் என்றனர்.