Published on 09/08/2019 | Edited on 09/08/2019
வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 12 மணி நிலவரப்படி 9, 883 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் தொடங்கியதில் இருந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் இருந்தார். 9 மணி நிலவரப்படி கதிர் ஆனந்த் முன்னிலையில் இருந்தார். ஏ.சி.சண்முகம் பின்னடைவை சந்தித்தார். அதன் பின்னர் ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.
இந்நிலையில், 12 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2, 74, 015 வாக்குகள் பெற்று
அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2,64,132 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 13,942 வாக்குகள் பெற்றுள்ளார்.