Skip to main content

பப்ஜி விளையாடிய மகனை கண்டித்த பெற்றோர்... கோபத்தில் மகன் தற்கொலை!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

Parents condemn son who played Babji ... Son commits suicide in anger!

 

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கோமுட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது இளைய மகன் சீனிவாசன் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி சேர காத்துள்ளார். கரோனா ஊரடங்கு விடுமுறை காலத்தில் தொடர்ந்து செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மாணவனின்  தந்தை பெருமாள் பப்ஜி கேம் விளையாடுவது தவறு, அரசே தடை செய்துவிட்டது, விளையாட கூடாது என்று சீனிவாசனிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு அறிவுரை கூறி கண்டித்துள்ளார். இதனால் கோபமான சீனிவாசன் வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று  கதவை பூட்டிக்கொண்டுள்ளார். 

 

நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து பெற்றோர் அலறி துடித்து அழுதுள்ளனர். 

 

இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்