Skip to main content

"பொய் பேசுவதற்கான நோபல் பரிசு ஸ்டாலினுக்கு கொடுக்கலாம்.." - எடப்பாடி பழனிசாமி

Published on 13/02/2022 | Edited on 13/02/2022

 

ே்ி

 

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாக வேலை செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கணொளி காட்சி வாயிலாக மாநகராட்சி பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

இந்நிலையில் நேற்று கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது ஆளும் கட்சியான திமுகவை சகட்டு மேனிக்கு எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " திமுக அரசு மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. பொய் சொல்வதையே வேலையாக அவர்கள் வைத்துள்ளனர். ஸ்டாலின் 70 சதவீதம் பொய் சொன்னால், அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் 90 சதவீதம் பொய் சொல்கிறார்.  பொய் சொல்வதில் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கலாம். இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்