Skip to main content

பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கவிநாடு அணை! திருவிழாவாக கொண்டாடிய கிராம மக்கள்! 

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

Kavinadu Dam filled up after many years! Villagers celebrated as  festival!

 

கிராமத்து மக்களுக்கு ஒட்டுமொத்த சந்தோசம் என்பது ‘நல்லா மழை பெய்து, வெள்ளாமை வெளயனும்’ என ஒவ்வொரு கிராமத் திருவிழாவிலும் காவல் தெய்வங்களை வேண்டிக்கொள்வார்கள். கருப்பர், அய்யனார் கோயில்கள் என ஊர் காக்கும் சாமி கோயில்களிலும் பொங்கலிட்டு கிடா வெட்டுவது என திருவிழாவையே தெறிக்கவிடுவார்கள்.

 

அப்படித்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 பட்டிக்கு, கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஹெக்டருக்குப் பாசனம் தரும் மாவட்டத்தின் மிகப்பெரிய பாசன ஏரியான திருவப்பூர் கவிநாட்டு கண்மாய் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டி மதகுகள் நேற்று முன்தினம் (18.11.2021) திறக்கப்பட்டது. இந்த மதகுகள் திறக்கப்பட்ட உடனே ஊர் மக்களுக்குப் பெரும் சந்தோசம்.

 

இந்த திருவப்பூர் கவிநாட்டு கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் என அத்தனை வி.ஐ.பி.களும் ஒவ்வொரு நாளாக கண்மாயை பார்த்துச் சென்ற வண்ணம் இருக்கின்றனர்.

 

மொத்தத்தில் திருவப்பூர் கண்மாய், சுற்றுலாத்தலம் போல் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. இதனைக் கொண்டாடும் வகையிலும், இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையிலும் நேற்று கவிநாடு கண்மாயில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகளை நடத்தி, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சீரியல் லைட் போட்டு கிட்டத்தட்ட கிராம மக்கள் ஒரு திருவிழாவையே நடத்திவிட்டார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.