Published on 11/06/2020 | Edited on 11/06/2020
![KARNATAKA RELEASED DAMS WATER FROM TAMILNADU](http://image.nakkheeran.in/cdn/farfuture/4N4Gr2DcwJYxpRuEvvmz91M2M-wSqCQ6KHkkLciBqwY/1591852467/sites/default/files/inline-images/SALEM%202.jpg)
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்தது.
தமிழகத்துக்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய நீரை கர்நாடகா திறந்து விட்டதால் தமிழகத்துக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து 1,300 கனஅடி, கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 700 கன அடி என மொத்தம் 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1,000 கன அடியிலிருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நாளை (12/06/2020) பாசனத்திற்காக திறக்கப்படும் நிலையில் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.