கரோனா வைரஸ் பீதியில் தேக்கடியில் உள்ள முல்லைப் பெரியாறு சுற்றுலாத்தளம் வருகிற 31- ஆம் தேதி வரை மூடப்படுவதாக கேரள வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 4,000- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்.வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் உள்பட 50- க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள், அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன.
தமிழக எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு தேக்கடி இதமான சீதோசனத்துடன் காணப்படும். மேலும் வனப்பகுதிக்கு நடுவே படகு சவாரி செய்ய பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். தற்போது கரோனா அச்சம் காரணமாக முல்லை பெரியாறு அணையில் படகு சவாரி மற்றும் குமுளி உள்பட உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளது. அதுபோல் நட்சத்திர ஓட்டல்களிலும் முன்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வருகிற 31ம் தேதி வரை அனைத்து சுற்றுலா இடங்களும் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.