சுதந்திர தின விழா, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கிராம சபைக் கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. அதற்கு காரணமாக கரோனா பரவுவதற்கு கிராமசபை கூட்டங்கள் காரணமாகிவிடும். அங்கு தனிமனித இடைவெளி பின்பற்றப்படாத நிலை ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கிராமசபை கூட்டங்களை நடத்த உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவின் கே.என்.நேரு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் டாஸ்மாக்கில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
மேலும், தனிமனித இடைவெளி காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்றால் டாஸ்மாக்கில் மட்டும் அது பின்பற்றப்படுகிறதா? குறிப்பிட்ட விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது எனக் கூற அரசுக்கு எங்கே அதிகாரம் உள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக பதிலளிக்க, ஜனவரி 22 -ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.