Skip to main content

மீராமிதுனுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு..

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

High court extends custody of Meeramithun

 

வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண்  நண்பரின் நீதிமன்ற காவலைச் செப்டம்பர் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடைச் சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 


இந்த வழக்கு தொடர்பாக கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து  மீரா மிதுன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


இருவரின் நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து, இருவரும் இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 9ம் தேதி வரை (14 நாட்கள்) நீட்டித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் இருவருக்கும் ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்டது  குறிப்பிட்டத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்