தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக இன்று ஒரே நாளில் 2,396 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 32,186 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் 1,254 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை என்பது 56,845 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 36,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் 17-ஆவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 559 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்று வெளியிட்ட அறிவிப்புகள்படி, 38 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 704 ஆக அதிகரித்துள்ளது. 21 வது நாளாக கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இன்று 24 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 1,045 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
அதேபோல் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் இன்று 130 பேருக்கும், மதுரையில் 80 பேருக்கும் ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்காம் நாளாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில் 2000 -ஐ தாண்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.