Skip to main content

"இந்தியாவின் அதிகார சபை!" டாப் 10 பட்டியலில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் !

Published on 04/11/2024 | Edited on 04/11/2024
20 Politicians - India's Power pantheon

இந்தியாவின் பிரபல பத்திரிகையான 'இண்டியா டுடே' வின்  இந்த நவம்பர் மாத இதழில் "இந்தியாவின் அதிகார சபை" என்ற தலைப்பில் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.டாப் 10 பட்டியலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 8வது இடம் வழங்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் என நீளும் இந்த பட்டியலில் 5 மாநில முதலமைச்சர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக, அடக்கமான போர்வீரர், தென் கோட்டையைப் பிடித்து வைத்திருப்பவர், மொழித் தடையால் மு.க.ஸ்டாலின் அவர்களின் பேச்சு வடக்கு மாநிலங்களை அடையாமல் இருக்கலாம், ஆனால் பூர்வீக நிலமான தமிழ்நாட்டில் அவருக்குள்ள செல்வாக்கு காரணமாக அவரின் குரல் டெல்லி அதிகாரத்தின் செவியை எட்டுகிறது, லோக்சபாவில் திமுகவுக்கு 22 எம்பிக்கள், ராஜ்யசபையில் 10 எம்.பி.க்கள் மட்டுமின்றி தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 70% வாக்குகளுடன் வெற்றி வகை சூடியது,

எல்லா மாநிலங்களிலும் பாஜகவுக்கு சில தொகுதிகள் கிடைத்த சூழலிலும் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்காமல் செய்தது,  தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணிக்கு ஒரு முக்கிய அம்சமாக மு.க.ஸ்டாலின் அவர்கள் எஃகு போல திகழ்கிறார், 2021ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதிலிருந்து, அவரது திமுக அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது,

பார்ச்சூன் நிறுவனங்கள் உட்பட 130 நிறுவனங்களிடமிருந்து  ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார் "என்பது உள்ளிட்ட காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்தியாவின் டாப்-10 பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் இடம் பிடித்திருப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தில் சிறந்து விளங்குகிறார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்