Skip to main content

அரசு எனக்கு உதவுகிறதோ இல்லையோ? எனக்கு பின்வரும் வீரர்களுக்கு...கோமதி மாரிமுத்து பேட்டி

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கம் வென்று இந்தியாவிற்கு வரலாறு சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதும் அவருக்கு பாராட்டு மழை குவிந்து வரும் நிலையில், 

 

தாயகம் திரும்பிய கோமதி மாரிமுத்துவுக்கு உற்சாக வரவவெற்பளிக்கப்பட்டது. சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

 

gomathy marimuthu

 

எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் எனக்கு இவ்வளவு ஆதரவு கொடுப்பது மகிழ்ச்சியை தருகிறது. தமிழ்நாடு அரசு எனக்கு உதவுகிறதோ இல்லையோ  என்னை போன்று விளையாட்டில் சாதிக்கவேண்டும் என முயற்சிக்கும் மாணவிகளுக்கு உதவ வேண்டும் என நினைக்கிறேன். என்னைப்போன்று கஷ்டப்படாமல் எனக்கு பின் வரும் பொண்ணுங்க பசங்க நல்லா பண்ணனும், திறமை இருக்கவங்கள கொண்டு வரணும். வேர்ல்டு சாம்பியன்ஷீப்புக்கு தகுதியாகியுள்ளேன். ஒலிம்பிக்கில் விளையாண்டு தங்கம் வெல்ல முயற்சிப்பேன். தமிழக அரசு எனக்கு சப்போர்ட் செய்தால் நான் கண்டிப்பா ஒலிம்பிக்கில் மெடல் வாங்குவேன் எனக்கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்