தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வருகிறார்.
அதிமுக ஒற்றைத்தலைமை குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்ததால் இன்று அதிமுக அனைத்து நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இந்தநிலையில் தமிழக ஆளுநர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லி சென்ற ஆளுநர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரை சந்தித்து வருகிறார். மேலும் புதிய தலைமை செயலாளர், டிஜிபி நியமனம் குறித்தும், ஏழு தமிழர்கள் விடுதலை குறித்தும் இந்த சந்திப்பில் பேசவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள ராபர்ட் பயாஸ்,ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்திருந்தனர். சுமார் 8 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த வழக்கில், 7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் நிலை குறித்த விவாதத்தில் ஆளுநரிடம் நிலுவையில் உள்ள தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து அறிய மற்றும் அனுப்பப்பட்ட தீர்மானத்தில் ஆளுநர் அலுவலகம் என்ன முடிவு எடுக்கிறது என்று கேட்டு அறிந்து தெரிவிக்க இரண்டுவராம் அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.