Skip to main content

நான் ஜெயிச்சிட்டேன் அப்பா... கலைஞர் நினைவிடத்தில் உருகிய ஸ்டாலின்!

Published on 03/05/2021 | Edited on 03/05/2021
லஸ

 

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக தேர்தல் முடிவுகள் நேற்று காலை முதல் வெளியானது. ஆரம்பம் முதலே திமுக பெருவாரியான தொகுதிகளில் முன்னணியில் இருந்து வந்தது. இதில் திமுக தனியாக 125க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னணியில் இருக்கிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிபெரும்பான்மையை இந்த முறை பெற்றது. கடந்த தேர்தலில் மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்ட திமுக இந்த முறை அதிரடியான வெற்றியை பெற்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு வெற்றி சான்றிதழை பெற்ற அவர், நேராக கலைஞர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். தன்னுடைய அரசியல் வாழக்கையில் மே 2ம் தேதி அவருக்கு மறக்க முடியாத நாளாக மாறிபோனது. 


அந்த வகையில் கலைஞர் நினைவிடத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " இந்த வெற்றியை கொடுத்த மக்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். எங்களுக்கு வாக்களித்த மக்கள் மகிழும் வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு ஏன் வாக்களிக்காமல் சென்றோம் என்று நினைக்கும் வகையிலும் எங்கள் செயல்பாட்டை அமைத்துக்கொள்ளோம். இது கரோனா காலம் என்பதால் பதவியேற்பு விழாவை ஆளுநர் மாளிகையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அது எப்போது என்று இன்று அல்லது நாளை நான் அறிவிப்பேன்" என்றார். கலைஞர் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்திய போது மிகவும் உணர்ச்சிபூர்வமாக அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

 

சார்ந்த செய்திகள்