![arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/CHV9WlwB7OpsqasYIXc6k9YgHTOMBoXw0jZbtCzRxZs/1533347622/sites/default/files/inline-images/88_0.jpg)
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ஒரு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கைத்தொழில் ஆசிரியராக ராஜ்குமார் முத்துப்பாண்டி என்பவர் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அக்காள், தங்கை முறையே 8–ம் வகுப்பு, 6–ம் வகுப்பு படித்து வருகிறார்கள். அந்த மாணவிகளுக்கு ராஜ்குமார் முத்துப்பாண்டி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியரின் செயல் குறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது ஆசிரியர் ராஜ்குமார் முத்துப்பாண்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ராஜ்குமார் முத்துப்பாண்டி மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவர் ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டார்.