Skip to main content

மாணவி ப்ரதீபா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதியதவி! எடப்பாடி அறிவிப்பு

Published on 06/06/2018 | Edited on 06/06/2018


நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதுதொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் பிரதீபா என்பவர் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததன் காரணமாக மனமுடைந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று இரவு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

உயிரிழந்த பிரதீபாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிருந்து ரூ.7 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு, மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும், அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருக்கும் என்பதையும், மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை தவிர்க்க வேண்டும் என்பதையும் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்