/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/n3333_0.jpg)
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் (வயது 92) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:- தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் மறைவால் வேதனை அடைந்துள்ளேன். அவர் தமிழக மக்களுக்கு சேவையாற்றுவதிலும், பாஜகவை விரிவுபடுத்துவதிலும் முக்கிய பங்காற்றியவர் என கூறியுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு முறை தலைவராக இருந்த கே.என்.லட்சுமணன், ஒருமுறை மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)