Published on 18/02/2020 | Edited on 18/02/2020
2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்று வருகிறது.
மூன்றாவது நாளான இன்று (18/02/2020) பட்ஜெட் உரை மீதான விவாதத்தின் போது பேசிய முதல்வர் பழனிசாமி, "தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பில்லை. குடியுரிமை தொடர்பான அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள் என தி.மு.க விளக்க வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள்." இவ்வாறு முதல்வர் பேசினார்.