Published on 31/01/2019 | Edited on 31/01/2019

தனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் பத்திரிக்கையாசிரியர் மேத்யூ சாமுவேல் பேசுவதாகவும். மேலும் தொடர்ந்து தன்னை பற்றி பேசுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என 1.10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடுத்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச பத்திரிகையாசிரியர் மேத்யூ சாமுவேலுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டு எதிர் மனுதாரர் சயனுக்கு நோட்டீஸ் சென்றடையாததால் நான்கு வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.