அடிதடி, வெட்டு, குத்து, கடத்தல் என குற்றச் சம்பவம் நடந்தபிறகு, அந்த குற்றவாளிகளை கைது செய்வது வழக்கமான ஒன்றுதான்.
ஒரு குற்றச் செயல் நடக்கப்போகிறது என்பதை நுண்ணிய செயல்பாடுகள், ரகசியத் தகவல்கள் மூலம் அறிந்து அந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபடப்போகிற குற்றவாளிகளை வளைத்துப் பிடித்து, அப்படி ஒரு சம்பவம் நிகழாமல் தடுப்பதுதான் காவல்துறை செய்யவேண்டிய பணி.
குற்றம் நடக்கவிருப்பதைக் கண்டறிந்து, துரிதமாகச் செயல்பட்டு, தனக்கு கீழேயுள்ள அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்டு வேடிக்கை பார்க்காமல் களத்தில் தானே இறங்கி குற்றவாளிகளை துரத்திப் பிடித்து அவர்களுக்கு காப்பு மாட்டியிருக்கிறார் சென்னை மாநகர காவல்துறையின் தெற்கு இணை ஆணையாளர் சிபிச்சக்கரவர்த்தி.
சென்னை வேளச்சேரி பகுதியிலுள்ள பிரபலமான ஒரு நகைக்கடையின் உரிமை யாளர் மகனைக் கடத்திச் செல்ல, அல்லது கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுள்ளது ஒரு கும்பல். இதற்காக தென் மாவட்டமான தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு கூலிப்படை குழுவை களமிறக்கியுள்ளது. கொலை, கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுவதற்காக கூலிப்படை குழு சென்னையில் இறங்கியுள் ளது என்ற ரகசிய தகவல், மாநகர போலீஸ் கமிஷனர் அருணுக்கு கிடைத்திருக்கிறது.
வேளச்சேரி பகுதி மாநகர காவல்துறை தெற்கு இணை ஆணையாளர் சிபிச்சக்கர வர்த்தியின் கண்ட்ரோல் என்பதால், தனக்குக் கிடைத்த புகைப்படங்களை அனுப்பி சிபிச்சக்கரவர்த்தியை உஷார்படுத்தினார் கமிஷனர் அருண். இந்த ரகசிய தகவலை வெளியே கசியவிடாமல் கூலிப் படையின் செயல்பாடு களை நுணுக்கமாக கண் காணித்து வந்துள்ளார் சிபிச்சக்கரவர்த்தி. சம்ப வத்தை நடத்துவதற்காக வேளச்சேரி பகுதிக்கு வந்தது அந்த கூலிப் படை குழு. மார்ச் 14 -ஆம் தேதி இரவு 8 மணியளவில் நேரடியாகக் களமிறங்கிய சிபிச்சக்கரவர்த்தி, தன்னோடு பணிபுரியும் துணை ஆணையாளர் சீனிவாசனோடு வேளச்சேரி, ஆதம்பாக்கம் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அந்தப் பகுதி முழுக்க இரண்டுமணி நேரம் வாகன சோதனை நடைபெற்றது.
கடத்தல் மற்றும் கொலை சம்பவம் செய்யவந்த கூலிப்படையினர் சுரேஷ், முருகன், பாலமுருகன், வினோத், சச்சின் ஆகியோரை அடையாளம் கண்ட அதிகாரிகள் சிபிச்சக்கர வர்த்தியும், சீனிவாசனும் முதலில் மூன்று பேரை மடக்கிப் பிடித்தார்கள். உஷாரான குற்றவாளிகள் அங்குள்ள சந்து பொந்துகளில் ஓட... விடாது துரத்திச்சென்ற சிபிச்சக்கர வர்த்தி அவ்வழியே வந்த இருசக்கர வாகனத் தில் லிஃப்ட் கேட்டு ஏறி வேகமாக துரத்திச் சென்று சுரேஷ் மற்றும் வினோத் ஆகிய இருவரை அப்படியே தட்டித் தூக்கி, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். சினிமா காட்சிகளை மிஞ்சும்வகையில் சென் னை நகர சாலையில் நடந்த இந்த துரத்தல், சேசிங் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதிரடியாகச் செயல்பட்ட சென்னை போலீசை பாராட்டத்தான் வேண்டும்.