![hi](http://image.nakkheeran.in/cdn/farfuture/DtJbzO0aktKBShtsRD7bbNrnb4w05ThLs-kQoNP4DEw/1534839062/sites/default/files/inline-images/court_12.jpg)
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸின் இறப்பு சான்றிதழ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
2016-ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், ஏ.கே.போஸின் வெற்றியை செல்லாது என அறிவித்து, தன்னை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி வேல்முருன் விசாரித்து வந்தார்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், கடந்த 2ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அவரது இறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி வேல்முருகன் முன் விசாரனைக்கு வந்தபோது, ஏ.கே.போஸின் இறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.