Skip to main content

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021
ரபக


அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்ததாகவும், அந்தக் காலகட்டத்தில் 3 முறை கருவுற்றபோது, தன்னைக் கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததாகவும், தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதுடன், அவருடன் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டுவதாகவும் நடிகை சாந்தினி போலீசில்  புகாரில் அளித்துள்ளார். 

 

இந்தப் புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், பணம் பறிக்கும் நோக்கில்  நடிகை செயல்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்