கர்நாடகா மற்றும் கேரளா என மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கன மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அனைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியது. இதனால் இரு அனைகளுக்கும் வரும் உபரி நீர் அப்படியே மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.
இன்று இரவில் மேட்டூர் அனையின் முழு கொள்ளளவான 120 அடியும் எட்டியது. மேட்டூர் அணைக்கு கர்நாடகாவிலிருந்து மொத்தம் 82 ஆயிரம் கண அடி நீர் வந்தது. இதனால் மேட்டூர் அனையில் காவிரி நீரை தேக்க முடியாமல் உபரி நீர் அப்படியே வெளியேற்ற தொடங்கினார்கள்.
முதலில் 2000 கன அடி பிறகு 10 ஆயிரம் அடுத்து 20 ஆயிரம் தொடர்ந்து 40 ஆயிரம் என நீரை வெளியேற்றினார்கள்' நள்ளிரவு முதல் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிற்து நாளை முதல் காவிரியில் ஏறக்குறைய 1 லட்சம் கண அடி நீர் திறக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை டெல்டா பகுதி கரையோரங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதே போல் தொடர்ந்து மழை பெய்தால் காவிரியில் 1 லட்சம் கன அடிக்கு மேல் வெள்ளம் கரை புரண்டு ஓடும் என்கிறார்கள்.