Published on 02/05/2019 | Edited on 02/05/2019
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவு தேர்வை அண்ணா பல்கலை கழகமே நடத்தும் என அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலை கழகமே நடத்தும். டான்செட் தேர்வு மூலம் எம்பிஏ,எம்சிஏ,முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கும். AUCET என தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படாது என சூரப்பா தெரிவித்துள்ளார்.