வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரசெயலாளராக இருப்பவர் மதியழகன். வேளாண் விற்பனை குழு துணை தலைவராக இருப்பவர் அன்பு. இவர்கள் இருவரும் நண்பர்களாக தான் இருந்துவந்தனர். இந்நிலையில் கூட்டுறவு சங்க பதிவு போடுவதில் தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் டிசம்பர் 1ந்தேதி ந.செ மதியழகன் ஆதரவாளர்களும், அன்பு ஆதரவாளர்களும் திரண்டுள்ளனர். அன்பு தரப்பில் 30க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளார்கள். மதியழகன் தரப்பில் 5 பேர் மட்டுமமே இருந்துள்ளார்கள். இந்த இரண்டு தரப்பையும் பார்த்தவர்கள் பயந்துப்போய் ஒதுங்கிச்சென்றுள்ளனர்.
இதில் மதியழகனும் – அன்புவும் காரசாரமாக பேசிக்கொண்டுள்ளனர். ஒருக்கட்டத்தில் அன்பு, மதியழகனை பிடித்து தள்ளியவர் பளாரென அடித்தாக கூறப்படுகிறது. அதன்பின் இருதரப்பு ஆட்களும் காரசாரமாக சண்டை போட்டுக்கொண்டுள்ளனர். 1 மணி நேரம் நடந்த இந்த சண்டைக்கு பின் அந்த இடத்தில் இருந்து இருதரப்பும் கலைந்து சென்றுள்ளனர்.
எதற்காக இந்த சண்டை, என்ன பிரச்சனை எனத்தெரியாமல் அதனை சிலர் வேடிக்கை பார்த்துள்ளனர். ந.செவை நிர்வாகியொருவர் அடித்த விவகாரம் காட்டுத்தீ போல் ஆம்பூர் நகரில் பரவி என்ன சண்டையென அதிமுகவினர், ஒவ்வொருவரும் செல்போன் மூலம் என்னப்பிரச்சனை என விசாரித்து வருகின்றனர்.
ஆம்பூர் நகரத்தில் கெத்தாக வலம் வந்த அதிமுக ந.செ மதியழகனை, அதே கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகர் அடித்தது ஆம்பூர் நகரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.