![MK Stalin's swearing ; Prasanth Kishore participation ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/k58-F0dOCH1lSN15yLH54PR1Gi-eskoyyOzdnR-WQrA/1620373879/sites/default/files/2021-05/th-2_3.jpg)
![MK Stalin's swearing ; Prasanth Kishore participation ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/LiZ1pydzs3IqNGLxHyYvli4-gNueInXfOXqzJUPxVQE/1620373879/sites/default/files/2021-05/th-1_4.jpg)
Published on 07/05/2021 | Edited on 07/05/2021
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (07/05/2021) காலை 09.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், திமுகவிற்கு இந்தத் தேர்தலில் தேர்தல் வியூகராக செயல்பட்ட ஐபேக் நிறுவனத்தின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கலந்துகொண்டார்.