சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதற்காக, 68 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தி ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கையகப்படுத்தி கொண்டிருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. அரசுடைமையாக்கப்பட்டதை அரசிதழிலும் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் அசையும், அசையா பொருட்கள் என்னென்ன இருக்கிறது என்பதும் பட்டியிலிடப்பட்டுள்ளன. அதன்படி, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில், 4 கிலோ 372 கிராம் மதிப்பிலான தங்க பொருட்கள் -14 , 601 கிலோ 424 கிராம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் – 867, குளிர்சாதன கருவிகள் (ஏ.சி.) - 38, ஃபர்னிச்சர் பொருட்கள்- 556, தொலைபேசி மற்றும் மொபைல் ஃபோன்கள் – 29, தொலைக்காட்சி பெட்டிகள் – 11, பல வகையிலான சூட்கேஸ்கள் – 65, பிரிட்ஜ்கள் – 10, புத்தகங்கள் – 8,376 , கடிகாரங்கள் – 6 , ஜெராக்ஸ் மெஷின் மற்றும் லேசர் பிரிண்டர் தலா – 1 , ஸ்டேசனரி பொருட்கள் – 253 , துணிகள், தலையணைகள், துண்டுகள், போர்வைகள், செருப்புகள் உள்ளிட்டவைகள்– 10,438 என மொத்தம் 32,721 பொருட்கள் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளன.