Skip to main content

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்... தினகரனின் அமமுக கட்சியினரின் செயலால் கோபமான இபிஎஸ்!  

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

admk



அ.ம.மு.க.வின் தினகரன் வெளியே தலைகாட்டாத நிலையில், அவர்கட்சி பிரமுகர்கள் பற்றிய செய்திகள் மட்டும் அதிகமாக வெளியே வருவதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி விசாரித்தபோது, அ.ம.ம.முக. பிரமுகர் விழுப்புரம் முத்துக்குமார் கைது விவகாரம் பற்றிதான் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில், நிவாரணமாக வழங்கப்படும் அரிசி மூட்டைகளில், ‘வருங்கால முதல்வர் விஜயபாஸ்கர்’ என்கிற வாசகத்தோட அவர் படமும் இடம்பெற்றதாக சர்ச்சைகள் கிளம்பியது, மேலிடம் வரை இது பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதில் எரிச்சலான எடப்பாடி, இதுபற்றி விஜயபாஸ்கரிடமே விசாரித்துள்ளார். விஜயபாஸ்கரோ, இதுக்குக் காரணம் நான் இல்லை. நான் கொடுத்த அரிசி மூட்டை பைகளை யாரோ படம் பிடித்து, அதில் அப்படியொரு வாசகம் இருப்பது போல், சித்தரித்து உள்ளார்கள் என்று ஒரிஜினல் அரிசி மூட்டை படத்தோடு விளக்கம் கொடுத்துள்ளார். உடனே உளவுத்துறை மூலமாக எடப்பாடி அரசு தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்து, அ.ம.மு.க.வின் ஐ.டி. விங் செகரட்டரியான விழுப்புரம் முத்துக்குமாரை கைது செய்தது. அதுமட்டுமில்லை, நிவாரண பொருட்களில் முதல்வர் படத்தை சின்னதாக போட்டு கொண்டு, தங்கள் படத்தை பெருசாக போட்டுக் கொண்ட ராஜேந்திரபாலாஜி, ஜெயக்குமார் ஏரியாக்களிலிருந்தும் உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்து வருகிறது. மேலும் இதுபோன்று சில ரிப்போர்ட்டுகள் அண்மைகாலமாக முதல்வரை அப்செட்டாக்கி வருகிறது என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.
 

 

சார்ந்த செய்திகள்