Published on 22/03/2021 | Edited on 22/03/2021

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்ததிலிருந்தும் பல்வேறு நபர்கள் கட்சி மாறிவருகின்றனர். சமீபத்தில் அதிமுக கட்சியில் சீட் கிடைக்காததனால், அமமுக கட்சிக்கு மாறி உடனடியாக சாத்தூர் தொகுதி அமமுக வேட்பாளராக ஆனார் ராஜவர்மன்.
அதேபோல் தற்போது, திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், திமுகவிலிருந்து விலகி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார்.