Skip to main content

இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியா?

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

தி.மு.க.வின் மூத்த முன்னோடி அன்பில் தர்மலிங்கத்தின் சிலை திறப்புவிழா. அதேநாளில் திருச்சி மாவட்ட தி.மு.க.வின் கலைஞர் மாளிகையில் அண்ணா, கலைஞர் சிலை திறப்பு, அதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா... என "முப்பெரும் விழா', கடந்த 10-ஆம் தேதி திருச்சியில் நடந்தது. அண்ணா, கலைஞர், அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்புவிழா மேடையில் வழக்கத்திற்கு மாறாக, மு.க.ஸ்டாலினுடன் உதயநிதியும் சபரீசனும் இருந்தனர்.

 

dmkதென்னூர் உழவர் சந்தையில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்ட மேடையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் வரிசையில், கட்சியில் எந்தப் பதவியும் இல்லாத உதயநிதிக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. மேடையின் முன்பு முதல் வரிசையில் ஐ.டி. விங் நிர்வாகிகளுடன் அமர்ந்திருந்தார் ஸ்டாலின் மருமகன் சபரீசன். மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் அனைவருக்கும் சால்வை போர்த்திய தி.மு.க. மா.செ. கே.என்.நேரு, கீழே அமர்ந்திருந்த சபரீசனுக்கும் சால்வை போர்த்த தவறவில்லை.

 

dmkகூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ""கடந்த சட்டமன்றத் தேர்தலில் மகேஷ் பொய்யாமொழிக்காக திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்த நான், இந்த எம்.பி. தேர்தலில் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்தேன். உள்ளாட்சித் தேர்தலில் தெருத் தெருவாக பிரச்சாரம் செய்வேன். தமிழக சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் பிரச்சாரத்திற்கு தயாராக இருக்கிறேன். தி.மு.க. குடும்பக் கட்சிதான். ஆமா அன்பில் தர்மலிங்கம் தாத்தா மகேசுக்கு மட்டுமல்ல, எனக்கும் தாத்தாதான். எனது தாத்தா கலைஞர் எனக்கு மட்டுமல்ல, இப்போதிருக்கும் தி.மு.க. இளைஞர்கள் அனைவருக்கும் தாத்தாதான்''’என பேசியவர், ""இங்கே இருக்கும் திருநாவுக்கரசருக்கு ஒரு கோரிக்கை, நாங்குனேரியை தி.மு.க.வுக்கு விட்டுத்தாருங்கள், வென்று காட்டுவோம்''’என்றபோது எழுந்த கரகோஷம் அடங்க வெகுநேரம் ஆனது.


இறுதியாகப் பேசிய மு.க.ஸ்டாலின், எட்டுவழிச் சாலையால் கிடைக்கும் மூவாயிரம் கோடி கமிஷனுக்காக கொள்கையற்ற சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. நீட் தேர்வால் கடந்த ஆண்டு இரண்டுபேரை பலி கொடுத்தோம். இந்த ஆண்டு மூன்றுபேரை பலி கொடுத்திருக்கிறோம். 37 எம்.பி.க்கள் ஜெயித்து என்னசெய்யப் போகிறார்கள் எனக் கேட்கிறார்கள். நாடாளுமன்றம் கூடும்போது தெரியும் நாங்கள் என்ன செய்வோம் என்று. சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் ஒரு மரணஅடியைக் கொடுத்து, எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்''’என ஆவேசமானார். நாங்குனேரி தொகுதியில் காங்கிரசுக்குப் பதில் தி.மு.க. போட்டியிட்டால், உதயநிதிக்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் களமிறக்கி ஜெயிக்கலாம். அதன்பின் தி.மு.க. இளைஞரணி பொறுப்பைத் தரலாம் என மேல்மட்ட பேச்சுகள் விறுவிறுப்பாகியுள்ளன.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஜாஃபர் சாதிக் வழக்கு; துணை நடிகருக்கு இ.டி சம்மன்   

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
N

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஜாஃபர் சாதிக்கை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கைது செய்து மூன்று நாட்கள் காவல் கஸ்டடியில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து ஜாஃபர் சாதிக்கின் பினாமி என்று கூறப்பட்ட ஆவடியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் எட்டு மணி நேரமாக சோதனை நடைபெற்றது. இந்நிலையில் ஜாஃபர் சாதிக்கின் சகோதரரும், துணை நடிகருமான மைதீன் என்பவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜாஃபர் சாதிக் தயாரித்து அமீர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தில் மைதீன் துணை நடிகராக பணியாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. நேற்று ஜாஃபர் சாதிக்கின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று ஜாஃபர் சாதிக்கின் சகோதரருக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

Next Story

'பாமகவிற்குக் கடைசி தேர்தல்; சீமான் கீழ்பாக்கத்திற்குப் போகவேண்டும்' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
nn

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இடைத்தேர்தல் வெற்றி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

'பணம் கொடுத்து தான் திமுக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளாரே' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'திராவிட முன்னேற்றக் கழகம் பணம் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. பாமக தான் கிட்டத்தட்ட 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். பாமகவை பொறுத்தவரை நான் இந்த தேர்தல் ஆரம்பிக்கும் போதே சொன்னேன். இதுதான் அவர்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் என்று. ஏனென்றால் அவர்கள் கூட சேர்ந்து இருப்பவர்கள் மிகவும் மோசமானவர்கள், வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். அது மட்டுமல்ல ராமதாசை பொறுத்தவரை நாங்கள் இனிமேல் மரம் வெட்ட மாட்டோம் என்று சொன்னால் தான் தமிழ்நாட்டில் டெபாசிட்டே வாங்க முடியும்'' என்றார்.

தொடர்ந்து சீமான் குறித்து கேள்வி எழுப்ப செய்தியாளர்கள் முயன்றபோதே, 'சீமானுடைய கருத்துகள் எல்லாம் நான் கருத்தாகவே எடுத்துக் கொள்வதில்லை. அவரை பொறுத்தவரை ஒன்று குற்றாலத்திற்கு செல்ல வேண்டும். அல்லது கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு நாள் ஒன்று பேசுகின்றார் மறுநாள் இன்னொன்றை பேசுகின்றார். அவரைப் பொறுத்தவரை அவருக்கு மேலே கொஞ்சம் குழம்பி இருக்கிறது என்று நினைக்கின்றேன்.

அதிமுகவின் ஓட்டு திமுகவிற்கு சென்று உள்ளதா? என்ற கேள்விக்கு 'எல்லா தமிழர்களின் ஓட்டும் திமுகவிற்கு சென்று இருக்கிறது' என்றார்.