Skip to main content

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! 

Published on 25/11/2024 | Edited on 25/11/2024
Winter Session of Parliament Begins Today

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (25.11.2024) தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், வக்பு சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று (24.11.2024) காலை 11 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான குழு அறையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சியினர் சார்பில் மூத்த உறுப்பினர்கள்,  பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரைச் சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு,  மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பத் தயாராகி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்