Skip to main content

"கரோனா மூன்றாவது அலையை சமாளிக்க தயாராகுங்கள்" - மத்திய அரசை அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

sc

 

இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ளது. இந்திய தலைநகர் டெல்லி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் திண்டாடி வருகிறது. இந்தநிலையில், இதுதொடர்பான வழக்கு ஒன்றை இன்று (06.05.2021) விசாரித்த உச்ச நீதிமன்றம், கரோனா மூன்றாவது அலையை சமாளிக்க தயாராகுமாறு மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.

 

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம், "நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் மூன்றாவது அலை விரைவில் வர இருக்கிறது. மேலும், அது குழந்தைகளைப் பாதிக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்றால், அவர்களின் பெற்றோர்களும் செல்ல வேண்டியிருக்கும். எனவே அந்த வயதை சார்ந்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். நாம் இதுகுறித்து அறிவியல் ரீதியாக திட்டமிட்டு, ஏற்பாடுகளை செய்ய 0வேண்டும்" என மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.

 

"நாம் இப்போது தயாரானால்தான், நம்மால் மூன்றாவது அலையை சமாளிக்க முடியும்" என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் கூடுதல் ஆக்சிஜன் இருப்பை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகிப்பதற்கான மத்திய அரசின் ஃபார்முலாவை அது மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், ஆக்சிஜன் விநியோக விவகாரத்தை இந்திய அளவில் பார்க்க வேண்டும் என மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.

 

மேலும், எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தவிட்டு, மேற்படிப்புக்காக காத்திருக்கும் மருத்துவர்களின் சேவையை எப்படி பெறுவது என்பது குறித்து பரிசீலிக்குமாறும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம், "இன்று நம்மிடம் ஒன்றரை லட்சம் மருத்துவர்கள், மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக காத்திருக்கிறார்கள். ஒன்றரை லட்சம் மருத்துவர்களும், இரண்டரை லட்சம் செவிலியர்களும் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் சேவை மூன்றாவது அலையின்போது முக்கியமானதாக இருக்கும்" என கூறியுள்ளது.

 

இந்தியாவில் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதென மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.