/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3435.jpg)
புதுச்சேரி முத்தியால்பேட்டை, விஸ்வநாதர் நகர், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சரவணன். இவர் வரதராஜு என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து கொண்டு, அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். சரவணன் குடியிருக்கும் வாடகை வீட்டிற்கு வழக்கமாக மின் கட்டணம் மாதம் ரூ.800க்குள் வருவது தான் வழக்கம். கடந்த மாதம் மின்சார உபயோகத்திற்கான ரீடிங்கில் ரூ. 680 மின் கட்டணமாக வந்துள்ளது. ஆனால் இந்த மாதம் அவருக்கு மின் கட்டணம் 12,26,944 ரூபாய் என வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சரவணன் முத்தியால்பேட்டையில் உள்ள மின்சார அலுவலகத்திற்கு சென்று விபரம் கேட்டார். தவறுதலாக அச்சாகியுள்ளது இதை சரிசெய்து தரப்படும் என உறுதியளித்தனர். அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி குடியிருக்கும் வாடகை வீட்டிற்கு 12 லட்சம் மின்கட்டணம் வந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)