நிலக்கரி கையிருப்பு மற்றும் மின்சார உற்பத்தி உள்ளிட்டவைக் குறித்து டெல்லியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் இன்று (10/10/2021) காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சார வாரியத்தின் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், "நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மின் தட்டுப்பாடு வராது. நான்கு நாட்களுக்கு கையிருப்பு உள்ள நிலையில் தினமும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி நிரப்பப்படுகிறது. நிலக்கரி இருப்பு தொடர்பாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் தொடர்ந்து பேசி வருகிறேன்.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு தொடர்ந்து நிலக்கரி அனுப்புவதாக கெய்ல் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. நிலக்கரி பற்றாக்குறை என்பது இதுவரை இல்லை; இனியும் இருக்காது. பிரச்சனைக்கு காரணம் எதுவும் கிடைக்காததால் நிலக்கரியை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது" என்று குற்றம் சாட்டினார்.