Skip to main content

ஆ. ராசா பேச்சுக்கு பிரக்யா சிங் தாகூர் எதிர்ப்பு!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

மக்களவையில் சிறப்புப் பாதுகாப்புப் படைச் சட்டத் திருத்தம் குறித்த விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் திமுக எம்பி ஆ.ராசா பேசினார். அப்போது அவர் காந்தியை கொலை செய்ததற்கு கோட்சே தெரிவித்த காரணத்தை சுட்டிக் காட்டினார். அதில், 'காந்தியை கொலை செய்த கோட்சே 32 ஆண்டுகளாக காந்தி மீது வஞ்சம் கொண்டிருந்தேன். அதன்பிறகு தான் காந்தியைதிட்டமிட்டு கொலை செய்தேன். ஏனென்றால் காந்தி ஒரு சார்புக் கொள்கையுடவர் என நினைத்தேன் எனக் கூறியிருந்தார்' எனத் தெரிவித்தார்.



அந்த நேரத்தில் ஆ.ராசாவின் பேச்சுக்கு குறுக்கிட்டு பேசிய மத்திய பிரதேச மாநில பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர், 'இந்த விவாதத்தில் தேச பக்தரை குறிப்பிடக் கூடாது' என எதிர்ப்பு தெரிவித்தார். பிரக்யா சிங் தாகூர் காந்தியை கொலை செய்த கோட்சேவை தேசபக்தர் என்று மீண்டும் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு கோட்சே ஒரு தேசபக்தர் என்று அவர் தொடர்ந்து கூறிவந்த சர்ச்சையே இன்னும் பேசுபொருளாக நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்