Skip to main content

நோக்கியா நிறுவனத்தின் விளம்பர தூதராக ஆலியா பட்

Published on 17/10/2018 | Edited on 17/10/2018

 

 

nn

 

நோக்கியா நிறுவனம் மீண்டும் சந்தையில்  பிரபலமாகிவருகிறது. இந்தநிலையில் அதன் விளம்பர தூதராக பிரபல நடிகை ஆலியா பட் நியமிக்கப்பட்டிருக்கிறார். தீபாவளி மற்றும் தொடர்ந்து பண்டிகை காலங்கள் வரும் நிலையில் ஆலியா பட் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளது, மக்கள் மத்தியில்   நோக்கியா ஸ்மார்ட் போன்களை இன்னும் பிரபலப்படுத்தும், என்று நிறுவனத்தின் துணை தலைவர் அஜய் மேத்தா தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

அனிமல் பட விமர்சனம் - ராஷ்மிகா குறித்து ஆலியா பட்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

alia bhatt about rashmika mandana in animal movie

 

அர்ஜூன் ரெட்டி, கபிர் சிங் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள படம் ‘அனிமல்’. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தன்னா, அனில் கபூர், பாபி தியோல், சக்தி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தை 4 பேர் தயாரித்துள்ளனர். 8 பேர் இசையமைத்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. 

 

இந்த நிலையில் நடிகையும் ரன்பீர் கபூரின் மனைவியுமான ஆலியா பட் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி போட்டுள்ள அவர், “சந்தீப் ரெட்டி வங்கா, உங்களை போல் யாரும் இல்லை. இந்தப் படத்தில் வருபவை அதிர்ச்சியூட்டுகிறது, ஆச்சரியப்பட வைக்கிறது. கூஸ்பம்ஸாகவும் இருக்கிறது. ராஷ்மிகா மந்தனா, படத்தில் மிக அழகாகவும் நேர்மையாகவும் இருக்கிறீர்கள். அந்த காட்சியில் உங்களை நான் ரசித்தேன். ரொம்ப ஸ்பெஷலாகவும் இன்ஸ்பைரிங்காகவும் இருந்தது” என குறிப்பிட்டு படக்குழுவை பாராட்டினார். 

 

 

 

 

Next Story

சாய் பல்லவிக்கு பதில் ஆலியா பட்

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

alia bhatt replace sai pallavi in ranbir kapoor ramayana movie

 

ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் முன்னரே வெளிவந்துள்ள நிலையில் ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து 3டி தொழில்நுட்பத்தில் பிரபாஸ், க்ரீத்தி சனோன், சையிப் அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள  'ஆதிபுருஷ்' திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இதனிடையே 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும் கே.ஜி.எஃப் புகழ் யஷ் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. 

 

இந்நிலையில் சாய் பல்லவிக்கு பதிலாக ஆலியா பட் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளதாகவும் இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.