Skip to main content

இலங்கை அமைச்சரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த இந்தியத் தலைவர்களுக்கு நன்றி! -செந்தில் தொண்டமான் அறிக்கை!

Published on 05/06/2020 | Edited on 08/06/2020

 

 Thanks to the Indian leaders who condoled the demise of the Sri Lankan Minister! Senthil Thondaman Report!

                                                            ஆறுமுகன்  தொண்டமான் 

 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த இந்தியத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இலங்கை ஊவா மாகாண முன்னாள் துணை முதல்வரும் தற்போதைய பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான்.
 


மலையகத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.  தொழிற்சங்கவாதியான இவர் கடந்த 20 வருடங்களாகப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் கடந்த, 2020 மே-26 ஆம் தேதி இந்திய தூதரைச் சந்தித்து மலையகத் தமிழகர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் குறித்து விவாதித்தார்.

பிறகு, இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றுவிட்டு தனது பத்தரமுல்லயிலுள்ள வீட்டிற்குச் சென்றவர் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே சரிந்தார். இதனால், அவசர அவசரமாக அருகிலுள்ள தலங்கம மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட ஆறுமுகன் தொண்டமான் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 56 வயதிலேயே அவரது இறப்பு இலங்கை மற்றும் தமிழகத் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

 


இந்நிலையில், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்து பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்ததோடு இந்திய வம்சாவளி தமிழர்களுக்குப் பேரிழப்பு என இரங்கல் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், ஆசிரியர் கி.வீரமணி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அமைச்சர் ஆறுமுக தொண்டமானின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தனர்.  
 

 Thanks to the Indian leaders who condoled the demise of the Sri Lankan Minister! Senthil Thondaman Report!

                                                         செந்தில் தொண்டமான் 


இதுகுறித்து, அமைச்சர் ஆறுமுக தொண்டமானின் மைத்துனரும் இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை மத்திய அமைச்சராகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவு செய்தி அறிந்து தாங்கள் அனுப்பிய இரங்கல் செய்தி எங்களுக்கு வந்து சேர்ந்தது.  துயரமான  நேரத்தில் எங்களின் துக்கத்தில் நீங்கள் பங்கெடுத்தது மிகவும் ஆறுதலாக இருந்தது” என்று நன்றி தெரிவித்தார். கௌரவ அமைச்சர் ஆறுமுக தொண்டமான் அவர்களின் மறைவுக்கு  இரங்கல் செய்தி  அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி -தமிழக முதல்வர்,  ஓ. பன்னீர்செல்வம் -துணை முதல்வர், மு. க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர், தி.மு.க. தலைவர்,  கி.வீரமணி தலைவர் - திராவிடர் கழகம், வைகோ -ம.தி.மு.க. பொதுச் செயலாளர்,  விஜயகாந்த் - தலைவர், தே.மு.தி.க., தமிழக காங்கிரஸ் கமிட்டி- கந்தசாமி, அமைச்சர்- சமூகநலத்துறை, ராமதாஸ் -பா.ம.க. நிறுவனர், திருமாவளவன் எம்.பி.- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கனிமொழி -மக்களவை உறுப்பினர், திருநாவுக்கரசர்- நாடாளுமன்ற உறுப்பினர்,  புதுச்சேரி,  டி.டி.வி. தினகரன்- அ.மு.மு.க. பொதுச் செயலாளர், அன்புமணி- பா.ம.க. இளைஞரணி தலைவர், ஜி.கே.வாசன் -தலைவர்- தமிழ் மாநில காங்கிரஸ், சீமான் -நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது பெயர்களைத் தனது அறிக்கையில் குறிப்பிட்டு நன்றிகள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.



 

சார்ந்த செய்திகள்