/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/416_13.jpg)
துபாயில் கடந்த 26ஆம் தேதி நடந்த குளோபல் வில்லேஜ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்களுடன் ஜாலியாக அவர் கலந்துரையாடினார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் அந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர்கள் குறித்து அவர் பேசியது தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “எனக்கு தென்னிந்தியாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அல்லு அர்ஜுன், பிரபாஸ், ராம் சரண், யஷ், மகேஷ் பாபு, விஜய், ரஜினி, கமல்... அவர்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவர்கள் வேகமாக நடனமாடுவதை நிறுத்த வேண்டும். அவர்களுக்கு சமமாக ஆடுவது எனக்கு கஷ்டமாக இருக்கிறது” என ஜாலியாக சொன்னார்.
ஷாருக்கான் கடைசியாக டங்கி படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக தமிழ் இயக்குநராக அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார். நேரடி தமிழ் படத்தில் கமலுடன் இணைந்து ஹே ராம் படத்தில் நடித்தார். தொடர்ந்து ரஜினி விஜய் உள்ளிட்ட சில நடிகர்களுடன் தனது நட்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)