ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுலம் மாவட்டத்தில் ‘இந்தியன் ஆர்மி காலிங்’ (Indian Army Calling) எனும் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை, பசவா வெங்கட ரமணா என்பவர் நடத்தி வருகிறார். இந்த மையத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பயிற்சி மையத்தின் நிறுவனர் பசவா வெங்கட ரமணா, மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மாணவர் ஒருவரை லேப்டாப் ஜார்ஜரை வைத்து கடுமையாக தாக்குகிறார். இதில், அந்த மாணவர் வலிதாங்க முடியாமல் அழுது துடிக்கிறார் என்பது போல் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் ராம்மோகன் நாயுடுவுக்கு நெருக்கமானவர் என்று கூறி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்த வைரலானதை தொடர்ந்து, ஆந்திர மாநில மனித வளத்துறை அமைச்சர் நாரே லோகேஷ், இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.