Published on 04/02/2025 | Edited on 04/02/2025
பழம்பெரும் நடிகை புஷ்ப லதா காலமானார் .நடிகர் ஏ.வி.எம் ராஜனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான புஷ்ப லதா 87 காலமானார்.
சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புஷ்ப லதா 'கொங்கு நாட்டு தங்கம்' திரைப்படம் மூலம் அறிமுகமானவர். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட அன்றைய கால முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.