மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டம், உஜல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுவன். இவரது தாய், ஓய்வுபெற்ற காவலரின் வீட்டில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 31ஆம் தேதி தனது தாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, காவலரின் வீட்டிற்கு தாயுடன் சேர்ந்து சிறுவனும் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த வீட்டின் அலமாரியில் இருந்த துப்பாக்கி மற்றும் சில தோட்டாக்கள் இருப்பதை அந்த சிறுவன் பார்த்துள்ளார். அதை ஒரு பொம்மை துப்பாக்கி என்று கருதிய அந்த சிறுவன், துப்பாக்கியையும் தோட்டாக்களையும் எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.
அதன் பின்னர், மறுநாள் தனது நண்பர்களுடன் கிராமத்திற்கு அருகில் உள்ளமேய்ச்சல் நிலத்திற்குச் சென்று துப்பாக்கியை வான் நோக்கி சுட்டுள்ளார். இதற்கிடையில், தனது துப்பாக்கி காணாமல் போனதை உணர்ந்த அந்த ஓய்வு பெற்ற போலீசார், காவல்நிலையத்தில் புகாரில் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், சிறுவன் துப்பாக்கியைத் திருடி வானத்தை நோக்கி 20 முறை சுட்டுள்ளா என்பது தெரியவந்தது. அதன் பின்னர், சம்பவ இடத்தில் இருந்த 20 காலி தோட்டாக்கள் மற்றும் இரண்டு தோட்டாக்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.