Skip to main content

சபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்...வன்முறை வெடிக்குமா???

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
ayyappa temple


சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் உள்ளே சென்று பிராத்திக்கலாம் என்று உச்சநீதி மன்றம் அனுமதி அளித்தது. நாளை சபரிமலை கோவிலின் நடை திறப்பதால் இதில் பெண்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதனை அடுத்து  கேரளாவில் அனைத்து வயது பெண்களும் உள்ளே சென்று ஐயப்பனை வழிப்படக்கூடாது பல்வேறு இந்து அமைப்புகள், பந்தளம் மன்னர் குடும்பம் ஆகியோர் இந்த தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், கேரள அரசோ உச்சநீதி மன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளது. இந்த தீர்ப்பிற்கு எதிராக இருப்பவர்களிடம் இன்று பேச்சு வார்த்தை நடத்த கேரள அரசு இன்று முடிவு செய்துள்ளது. 
 

இந்நிலையில், நாளை கோவிலின் நடை திறப்பதால் பெண் பகதர்கள் பலர் வந்துள்ளனர். அதேபோல பெண் பத்திரிகையாளர்களும் அங்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் நிலக்கல் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களை அங்கு அனுப்பினால் வன்முறை வெடிக்கும் என்று இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்