Skip to main content

தண்ணீர் பரிமாறாமல் விட்டதால் பாதியில் நின்ற திருமணம்!

Published on 18/03/2025 | Edited on 18/03/2025

 

A wedding was interrupted because water was not served in karnataka

தண்ணீர் வழங்காததால், மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இரு வீட்டாருக்கிடையே மோதல் ஏற்பட்டு திருமணம் பாதியில் நின்ற சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. 

கர்நாடகா மாநிலம், தாவாங்கரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவருக்கும், தும்குர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 16ஆம் தேதி 10:30 மணியளவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

திருமணத்திற்கு முன்னதாக 15ஆம் தேதி இரவு திருமண வரவேற்பு விழா நடந்தது. அந்த விழாவின் போது நடந்த உணவு பந்தியில், கேட்டரிங் ஊழியர்கள் தண்ணீர் பரிமாறாமல் விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மணமகன் மற்றும் மணமகள் வீட்டார்க்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது. இந்த பிரச்சனை, அடுத்த நாள் காலை திருமணத்தன்றும் எதிரொலித்துள்ளது. இதனால், இந்த திருமணம் பாதியில் நின்றுள்ளது. 

சார்ந்த செய்திகள்