
அஸ்ஸாமில் காட்டுயானை ஒன்று குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்துவந்ததை அடுத்து நடு இரவில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர் வனத்துறையினர்.

அஸ்ஸாம் கவுகாத்தியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்கு காட்டுயானை புகுந்தது அட்டகாசம் செய்து வந்ததை அடுத்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் யானையை விரட்டையடிக்க முடியவில்லை இதனால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது. அடுத்தகட்ட நடவடிக்கையாக மயக்க மருந்து செலுத்தி யானையை பிடித்து யானை கிரேன் மூலம் யானையை அப்புறப்படுத்தி காட்டிற்குள் சென்று விட்டனர். பகலில் எதுவும் செய்ய முடியாததால் நடு இரவில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் காட்டுயானை காட்டிற்குள் விடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் விடியும்வரை பரபரப்பு நிலவியது.