Published on 25/12/2020 | Edited on 25/12/2020

ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடிகர் ரஜினிகாந்த் இன்று (25/12/2020) காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜினியோடு அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இருக்கிறார் எனக் கூறியுள்ள மருத்துவமனை நிர்வாகம், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்துத் தொலைப்பேசியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளது.