குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குல்பூஷண் ஜாதவ் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை.

அதனால் குற்றச்சாட்டு மற்றும் தண்டனையை மறுபரிசீலனை செய்யவும் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சர்வதேச நீதிமன்ற தீர்ப்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்ற செய்தியை அறிந்து நண்பர்கள் அதனை உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர். அதே போல் குல்பூஷணின் சொந்த மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராம மக்கள் பலூன்களை பறக்க விட்டும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.