Skip to main content

தவறான பாதையில் செல்வதைத் தடுக்கும் டயர் கில்லர்ஸ் அகற்றம்! (வீடியோ)

Published on 04/04/2018 | Edited on 04/04/2018

தவறான பாதையில் மேற்கொள்ளப்படும் பயணங்களைத் தடுப்பதற்காக சாலையில் பொருத்தப்பட்டிருந்த டயர் கில்லர்ஸ் நீக்கப்பட்டுள்ளன.

 

tyre

 

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தில் உள்ள அனமோரா பூங்கா பகுதியில் உள்ள சாலையில் டயர் கில்லர் கருவி பொருத்தப்பட்டிருந்தது. இந்த டயர் கில்லர்ஸ் சரியான பாதையில் பயணிப்பவர்களுக்கு வேகத்தடை போலவும், தவறான பாதையில் பயணித்தால் வாகனத்தின் டயரைப் பஞ்சராக்கும் கருவியாகவும் பயன்படும். தற்சமயம், அனமோரா பகுதியில் மட்டும் பொருத்தப்பட்டுள்ள இந்த கருவி, அதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மற்ற பகுதிகளிலும் பொருத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.

 

 

இந்நிலையில், புனே நகர போக்குவரத்துக் காவலர்கள் முறையான அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள இந்த கருவியை அகற்றவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்கள் விடுத்திருந்த கோரிக்கையில், ‘இந்த டயர் கில்லர்ஸ் கருவியில் இருக்கும் முட்கள் மிகக் கூர்மையாக இருக்கின்றன. யாரேனும் அதன்மீது விபத்தாக விழுந்தால், மிக மோசமான காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பள்ளிப்பகுதி என்பதால், இதனால் மிகப்பெரிய விபரீதம் ஏற்படலாம். மேலும், நெரிசல்மிக்க நகர்ப்பகுதி என்பதால் மக்களின் பாதுகாப்பைக் கருதி இதை நீக்கவேண்டும்’ என தெரிவித்திருந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று டயர் கில்லர்ஸ் கருவி நீக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்